பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ்-ஆப் ஸ்டேடஸ் : பணி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி ஆசிரியை ..

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளி, ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதற்காக நஃபிசா அடாரி என்ற ஆசிரியையினை பணி நீக்கம் செய்துள்ளது .
அக்டோபர் 25 அன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியின் ஆசிரியை நஃபிசா அதாரி என்ற ஆசிரியையின் வாட்ஸ்அப் பதிவு சமூக ஊடக தளங்களில் வைரலாகத் தொடங்கியது. பதிவில், அடாரி, “ஜீத் கயே, நாங்கள் வென்றோம்” என்ற உரையுடன் பாகிஸ்தான் வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்காக நபீசா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தால் அவர் தனது வகுப்பில் என்ன கற்பிக்கிறார் என்று நெட்டிசன்கள் சராமரியாக கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து திங்கட்கிழமை மாலை, பல நெட்டிசன்கள் ட்விட்டரில் ஒரு பணிநீக்க அறிவிப்பைப் பகிர்ந்துள்ளனர், அதில் நஃபிசா பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . “சோஜாதியா அறக்கட்டளையின் கூட்டத்தின் போது நீரஜா மோடி பள்ளியின் ஆசிரியை நஃபிசா அதாரி உடனடியாக பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று ஹிந்தியில் நோட்டீசு எழுதப்பட்டுள்ளது.ஆனால் , பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிவிப்பில் குறிப்பிடவில்லை
இது குறித்து வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ள ஆசிரியை , போட்டியை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து கொண்டிருந்தோம் . தனது குடும்பம் இரண்டு அணிகளாகப் பிரிந்ததாகவும், அதில் எங்கள் அணி பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததாகவும் நஃபிசா கூறினார். பாகிஸ்தான் வென்ற காரணத்தினால் தான் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பில் நாங்கள் வென்றுவிட்டோம் என ஸ்டேடஸ் வைத்ததாகவும் தெரிவித்து உள்ளார் . ஆனால் , அது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பட்டு வரும் நிலையில் தான் எனது வேலை பறிபோயுள்ளது என குறிப்பிட்டு உள்ளார் .