குறைந்த அளவு போதை பொருள் வைத்திருந்தால் தண்டனை தர தேவையில்லை – சமூக நீதி அமைச்சகம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரிய கான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் வருவாய் துறைக்கு ஒரு புதிய பரிந்துரையை வழங்கியுள்ளது.
அந்தப் பரிந்துரைகளின் படி சட்டவிரோதமாக போதை பொருள்களை வைத்திருப்பவர்களுக்கு போதை மருந்துகள் – மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் தற்போது தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் போதை பொருட்களின் அளவுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி போதைப்பொருள் வைத்திருந்த அவர்களுக்கு சட்டப்பிரிவு 27-ன் கீழ் ஓராண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ரூபாய் 20 ஆயிரம் வரை அபராதமோ அல்லது இரண்டு தண்டனையுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுய பயன்பாட்டுக்காக குறைந்த அளவில் போதைப்பொருளை வைத்திருப்பவர்களை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று வருவாய்த் துறைக்கு ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும் அவ்வாறு குறைந்த அளவில் போதைப் பொருளை வைத்து இருந்தவர்களை சிறைக்கு அனுப்பாமல் அரசு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு சென்று கட்டாய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட விதிகளில் எந்த விலகும் அளிக்கப்படுவதில்லை. ஆனால் ஷாருக்கானின் மகன் ஆர்யா கான் போதை தடுப்பு பிரிவில் கைதான இந்த நிலையில்
இப்பரிந்துரையை ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் வருவாய் துறைக்கு பரிந்துரைத்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.