போன வாரம் ஸ்மோடோ இந்த வாரம் கேஎப்சி -மொழி திணிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்கள்

1960களில் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களும் இந்தி மொழியைத் திணிக்க முற்பட்டனர். மொழி திணிப்பிற்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், தமிழ்நாடு மட்டும் மொழி திணிப்பை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி ஹிந்தி மொழியை விரட்டி அடித்தனர். அப்போது ஆரம்பித்த இந்த மொழி திணிப்பு போராட்டம் தற்போதுவரை நீடித்து வருகிறது. மொழி திணிப்பு போராட்டத்தில் தமிழ்நாடு மட்டும் போராடி கொண்டிருந்த நிலையில் இப்பொது இந்தியாவில் பல மாநிலங்களும் சேர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள கே.எஃப்.சி. விற்பனை மையம் ஒன்றில் இந்தி பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இந்தி பாடல் ஒலிபரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு கர்நாடகாவில் உள்ள மையம் என்பதால் கன்னடம் பாடலை ஒளிபரப்பு வேண்டும் எண்டு வலியுறுத்தியுள்ளார் . இதனை ஏற்க மறுத்த கே.எஃப்.சி. நிறுவன ஊழியர், இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து கே.எஃப்.சி. நிறுவன ஊழியரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதை கண்டித்து #RejectKFC என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வரும் கன்னடர்கள், இந்தியாவில் உள்ள மாநில மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளரிடம் சொமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், ஊழியரின் நடவடிக்கைக்காக சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.