யோகி ஆதித்யநாத்தை கொல்ல சதிதிட்டமா??

உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டார். அதனால் அந்த அரங்கை சுற்றி உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பல அடுக்கு சோதனைக்கு பிறகே பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இப்படி பல சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்ட போதும், ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றிய செயல் உத்தரபிரதேச மாநில காவலர்களின் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு நடைபெற்ற இறுதி கட்ட சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு நபர் கை துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு வேலை அங்கு கடைசி கட்ட சோதனை நடக்காமல் இருந்தால் என்னவாகியிருக்கும்??
கையில் துப்பாக்கி வைத்திருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் பஸ்தி பஞ்சாயத்தின் தலைவரின் உறவினர் ஜிதேந்திர பாண்டே என்பதும் அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமை பெற்று இருப்பதும் தெரியவந்தது. இதனிடையே பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த இரண்டு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசாரை பஸ்தி மாவட்ட போலீஸ் எஸ்பி ஆசிஷ் வஸ்தவா சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கும் மற்றும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவிருந்த மக்களுக்கும் சிறிது பதற்றம் ஏற்பட்டது.