யாத்திரையை தொடங்கிய பிரியங்கா.

உத்திர பிரதேசத்தில் நடைபெற்று வரும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி அடுத்த ஆண்டு நிறைவுக்கு வரும் நிலையில் அனைத்து கட்சிகளும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில், நேற்றைய தினம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை மற்றும் வியூகம் வகுக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. அதில் ’பிரதிக்யா யாத்ரா’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பிரியங்கா காந்தி பயணம் செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் 7 முக்கிய வாக்குறுதிகளை மக்களிடம் சேர்க்கும் நோக்கத்தில் பிரதிக்யா யாத்திரை வாரணாசி – ரேபரேலி, பாராபங்கி – ஜஹன்சி, சகாரன்பூர் – மதுரா, என 3 வழி தடங்களில், 10 நாட்களுக்கு முன்னெடுக்கப்படுகிறது. இந்த யாத்திரையில் காங்கிரஸ் தலைவர்கள் கோவில்களுக்கு சென்று பொது மக்களுடன் கலந்து கொள்வது, உத்திர பிரதேச மாநிலத்தின் நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம். பெண்களுக்கு இலவச ஈ-ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம், விவசாய கடன் ரத்து போன்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கொண்டு சேர்க்கும் பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள்.