பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் .. அணியில் இடத்தை உறுதி செய்யும் இஷான் !

உலகக்கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது .அதிரடியாக விளையாடிய ராகுல் மற்றும் இஷான் இப்போட்டியில் அரைசதம் விளாசினர் .

உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைப்பெற்று வருகிறது . தற்போது 8 அணிகள் பங்கேற்கும் தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் , சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற மற்ற அணிகளுக்கு இடையே பயிற்சி போட்டிகள் நடைப்பெற்று வருகிறது .அந்த வகையில் , நேற்று இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்க்கொண்டது .டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது .

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.அணியின் அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .இங்கிலாந்து அணிதரப்பில் அதிகப்பட்சமாக அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ(49) ரன்களும் , மொயின் அலி (43) ரன்களும் குவித்தனர் .

இந்திய அணி பந்துவீச்சினை பொறுத்தவரை புவனேஷ்வர் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 54 ரன்களை வாரி வழங்கினார் .தமிழக வீரர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார் .ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர் . 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷன் வலுவான தொடக்கத்தை அளித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறவிட்ட இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினர்.அதிரடியாக ஆடிய ராகுல் 24 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில்(3சிக்ஸர்,6பவுண்டரி) மார்க் உட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.முதல் விக்கெட்டுக்கு இஷான் கிஷன், ராகுல் இருவரும் 82 ரன்கள் சேர்த்தனர் .அடுத்துவந்த கேப்டன் கோலி, 11 ரன்னில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் அதில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.மறுபுறம் , இஷான் தனக்கே உரிய ஸ்டைலில் இங்கிலாந்து பந்துவீச்சை விளாசித் தள்ளினார்.46 பந்துகளில் 70 ரன்கள் சேரத்த நிலையில் இஷாந் கிஷன் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் ஆடும் 11 -ல் இவர் இடம் கேள்விக்குறியாகி உள்ளது .இஷானின் ஆட்டம் அவருக்கான இடத்தை உறுதி செய்ததாகவே கருதப்படுகிறது .பின்னர் , பண்ட் -பாண்டியா இணை பவுண்டரிகளாக விளாச ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

இந்திய அணி தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியினை 20 ஆம் தேதி எதிர்க்கொள்ள உள்ளது .அதைத் தொடர்ந்து சூப்பர் -12 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் வருகிற 24 ஆம் தேதி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…