கனவு நாயகன் கலாமின் பிறந்த நாள்

  இளைஞர்கள் உதவாக்கரைகள் என்று  சொல்லிக் கொ ண்டிருந்தவர்கள் மத்தியில் இளைஞர்களே கனவு காணுங்கள்  என்று சொல்லிய ஐயா அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம்.

      சாமானிய மனிதன் கண்ட கனவும் நிறைவேறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்துல் கலாமை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் விண்வெளித் துறையில் இருந்த போதும் சரி, இந்திய குடியரசுத் தலைவராக இருந்த போதும் சரி அவருக்கென தனி பாணியை உருவாக்கி அதில் பயணம் செய்தவர். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலை முதன் முதலில் உலக அரங்கில் கூறியவர். இத்தகைய, சிறப்புமிக்க  பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

             மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் தளத்தில் “நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்.” என்று தெரிவித்துள்ளார். 

               மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி தினகரன் அவரது ட்விட்டர் தளத்தில் “’சாதிக்க வேண்டும்’ என்ற கனவும், ‘உறுதியாக சாதிப்போம்’ என்கிற நம்பிக்கையும், அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர், எல்லோருக்கும் பிடித்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று!,சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாம் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம்! ” என்று தெரிவித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…