ஆஷிஷ் மிஷ்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

விவசாயிகள் மேல் கார் ஏற்றிய வழக்கில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.
கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்த விவசாயிகள் மீது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா
காரை மோதினார்.அதனால் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். அதை மறுத்த ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது மகன் அந்த காரை ஓட்ட வில்லை என்று கூற, காங்கிரஸ் கட்சி ஆஷிஷ் மிஷ்ரா கார் ஓட்டும் சம்பவ வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது .
இதையடுத்து உத்திர பிரதேச காவல்துறை, ஆஷிஷ் மிஷ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்தது.நீதிமன்றம் 2 வது முறை சம்மன் அனுப்பிய பின் கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் போலீசார் முன் ஆஷிஷ் மிஷ்ராவை ஆஜரானார்.
விவசாயிகள் மேல் கார் மோதியது தொடர்பாக 12 மணி நேரம் விசாரணைக்கு பின் போலீசார், ஆஷிஷ் மிஷ்ராவை கைது செய்து மருத்துவ பரிசோதனை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. விசாரணைக்கு ஆஷிஷ் மிஷ்ரா ஒத்துழைப்பு தரவில்லை என்றும் மழுப்பலாக பதிலளித்தார் என்றும் போலீசார் கூறியது. எனவே , நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.