நமது நாட்டு விமான படைகள் எந்த நாட்டிற்கும் சலைத்தது இல்லை

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்போரிலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நேற்று இந்திய விமானப்படையின் 89-வது ஆண்டு தினத்தை விமான படை வீரர்கள் கொண்டாடினர். அவர்களை பாராட்டும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் தளத்தில் தனது வாழ்த்துக்களை கூறினார். அந்த பதிவில் “விமானப்படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். இந்திய விமானப்படை என்றால் தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறை என்ற பொருள்படும். சவாலான தருணங்களில் மனிதநேய உணர்வுடன் செயல் பட்டு நாட்டை காக்கும் பணியில் தனித்துவமுடன் தங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.” என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி “கடந்த ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் படைகளை குவித்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்திய விமானப்படை தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன் மூலம் நமது விமானப்படை எந்த நேரத்திலும் தயாராக உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்தோம். எல்லை பகுதியில் நமக்கு எதிரான நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நமது வான் படையின் சிறந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான தீர்மானமும் அதிகரித்துள்ளது. தெளிவான வழிகாட்டுதல், நல்ல தலைமை, சிறந்த வளங்களை வழங்க என என்னால் முடிந்த அனைத்தையும் விமான படைகளுக்கு செய்வேன் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
தேசத்தின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் எந்த நிலையிலும் பாதுகாப்பது நமது புனிதமான கடமை என்று நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நம் தேசம் வீழ்ந்து போகாமல் இருக்க என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசினார்.