முதல் முறையாக கோவிலில் நுழைந்த தலித் மக்கள்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தலித் மக்களை அதிக சாதியினர் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து கொண்டிருந்தனர். தடுப்பையும் மீறி யாரேனும் கோவிலுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கபட்டிருந்தது. கடந்த வாரம் ஹாசன் மாவட்டத்திலுள்ள தின்டகூரு கோவிலுக்குள் நுழைந்த ஒரு குழந்தைக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல குல்பர்காவில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த இளைஞருக்கு ரூ 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னராய பட்டணத்தின் வட்டாட்சியர் ஜே. பி மாருதி அணைத்து சாதி மக்களையும் திரட்டி கூட்டம் ஒன்றை நடத்தினர். அது ஆதிக்க சாதியினருக்கு பிடிக்கவில்லை.இதையடுத்து நேற்று காவல் துறையின் முன்னிலையில் தலித் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதனை குறித்து 75 வயதான மூதாட்டி செய்தியாளர்களிடம் கூறியது” நான் 75 ஆண்டு காலமாக இந்த ஊரில் இருக்கிறேன். அனால் ஒரு முறைகூட நான் கோவிலுக்குள் சென்று கடவுளை வணங்கியது இல்லை. திருவிழா நாட்களில் கூட கோவிலுக்கு வெளியில் தான் வழிபடுவேன்.இப்போது முதல் முறையாக கோவிலுக்கு நுழைந்து வழிபட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ” என்று தெரிவித்தார்.

இது குறித்து பீர் ஆர்மி அமைப்பின் நிர்வாகி சந்தோஷ் கூறியது”பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த ஆலய நுழைவுப் போராட்டம் இன்று வெற்றி அடைந்திருக்கிறது. இது ஒரு மிக பெரிய சாதனை. கோவிலுக்குள் சென்று பூஜை செய்ததை விட, கோவிலுக்குள் செல்வதற்கான உரிமை பெற்றதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.