பாஜகவில் இணைய போகும் அம்ரிந்தர் சிங்

காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் மாரி கட்சியில் நடக்கும் உட்கட்சி பூசலால் படிப்படியாக அதன் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.அம்ரிந்தர் சிங்க்கும், நவ்ஜோதி சிங் சித்துவிற்கும் மோதல் போக்கு நிலவி வந்தது.அதனால் கட்சியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
அதனால், பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதிவில் இருந்து விலகினார்.அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் நவ்ஜோதி சிங் சித்துவின் இந்த நடவடிக்கை பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்ரிந்தர் சிங்க்கு எதிராக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டார் சித்து.பதவி விலகிய அம்ரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் “ நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். எனது அடுத்த கட்ட முடிவுகளை விரைவில் அறிவிப்பேன் . காங்கிரஸ் தலைமை யாரை நம்புகிறதோ அவர்களையே முதல் பதவிக்கும் நியமிக்கிட்டும் ” என்று கூறினார்.
இந்த குழப்பத்தால் சோனியா காந்தி , சரஞ்சித் சிங்கை முதலமைச்சராக நியமித்தார்.இந்நிலையில் அம்ரிந்தர் சிங் பாஜகவில் இனைய போவதாக செய்திகள் வந்தன. பின், நேற்று மாலை அம்ரிந்தர் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக இந்த சந்திப்பு நீடித்தது.
இதனை குறித்து, அம்ரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவ்நீத் துக்ரால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்”நீண்ட நாட்களாக நடந்து வரும் விவசாய போராட்டத்தை குறித்து பேசவே அவர் அமித் ஷாவை சந்தித்தார். 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தவே இந்த சந்திப்பு என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வுகள் அம்ரிந்தர் சிங் பாஜகவில் இணையும் வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.