கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும்… கர்நாடக முதல்வர் அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தொற்றின் தாக்கமே இன்னும் குறையவில்லை. இந்நிலையில் கருப்பு பூஞ்சைத் தொற்றின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் நான்கு வாரங்களுக்கு ஒரு ஊசியை எடுத்து கொள்ள வேண்டுமாம். இந்த ஊசி ஒன்றின் விலை 10,000 முதல் 12,000 வரை உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஏழை எளிய மக்கள் சிரமத்திற்கு ஆளாவர்கள் என்பதால் கருப்பு பூஞ்சைத் தொற்று பாதித்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.