ஓணம் பண்டிகைக்கு தயாராகும் கேரளா!

நாளை மறுதினம் ஓணம் பண்டிகை தொடங்குவதையடுத்து கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள்.
ஓணம் பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை கேரளாவின் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். கொரோனா பரவலின் காரணத்தினால் கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு கேரளா தயாராகி வருகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் பொது இடங்களில் கூடாமல் வீட்டிலிருந்தபடியே ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓணத்தின் முதல் நாளான உத்திராட நாள், நாளை கொண்டாடப்படுவதால் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். ஜவுளி, பூக்கள், காய்கறிகள் வாங்க கடைகளில் மக்கள் கூடி வருகிறார்கள். கேரளாவில் மிகப்பெரிய சந்தையான திருவனந்தபுரம் சாலா மார்க்கெட்டிலும் மக்கள் அதிக அளவு காணப்பட்டனர்.