மக்களை சந்திக்கவே யாத்திரை செல்கிறேன்… எல். முருகன் பேட்டி!

மக்களை சந்திக்கவே யாத்திரை செல்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று, கோவையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மக்களைச் சந்திப்பதற்காக தமிழகத்தில் யாத்திரை செல்கிறேன் எனவும், இந்த யாத்திரைகள் அனைத்தும் உரிய அனுமதி பெற்று நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
கொங்குநாடு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்யவேண்டியது என்று கூறினார்.
மேலும் அவரிடம் நாடாளுமன்ற அமளி குறித்தும், தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.
பெட்ரோல் விலை குறித்து பேசிய இணையமைச்சர், சர்வதேச பெட்ரோல் நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என தெரிவித்தார்.