காலிறுதிக்கு முன்னேறிய பூஜா ராணி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 75 கிலோ மெடில் வெயிட் எடைப்பிரிவில் அவர் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
பூஜா ராணி அவருக்கு எதிராக போட்டியிட்ட அல்ஜீரிய நாட்டு வீராங்கனை இக்ராக் சாய்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் அவர் சீனா அல்லது அயர்லாந்து நாட்டு வீரங்கனைகளில் யாரேனும் ஒருவரை எதிர்த்து விளையாட வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.