பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க முடியாது… உச்சநீதி மன்றம் கருத்து

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால், மார்க்கெட், சிக்னல் உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களின் காரணமாக கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் பிச்சை எடுப்பதைத் தடுக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழங்கு தொடங்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வறுமையில் வாடாத எவரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். அதனால், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவர்களை வசதியானவர்களின் கண்ணோட்டத்தில் அணுக முடியாது.

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு உயர் கல்வியை வழங்க வேண்டியது அவசியம். தடை செய்வதை விட பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாவுழ்வு மையம் ஏற்படுத்தி தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா பரவல் அச்சம் காரணமாக பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதா என உறுதி செய்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *