தெலுங்கானாவில் கனமழை!

கடந்த சில நாட்களாக தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சிரிசில்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் சூழந்துள்ளதால் நீரில் மிதந்தபடி வாகனங்கள் செல்கின்றன. மேலும் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தெலுங்கானாவின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர் கனமழையால் தெலுங்கானாவின் சாலைகள் நீரில் மூழ்கி வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.