நாடாளுமன்றத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி!

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததும் அதற்காக
விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து அரசிற்கு எதிராக போராடி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராகுல் காந்தி விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் 3 வேளாண் சட்டங்களையும் கைவிடக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
காந்தி சிலை முன்பாக நடந்த தர்ணாவில் காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மணீஸ் திவாரி, கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர், ஜோதிமணி, சசிதரூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது விவசாயத்தை காப்போம், தேசத்தை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.