எதிர்கட்சிகளின் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் தனது அறிமுக உரையை அறிக்கை மூலம் தாக்கல் செய்தார்.
அப்போது, பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகல் 3 மணிக்கு மேல் கூடிய மக்களவையில், பத்திரிகையாளர்களை உளவு பார்த்தது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்த பின்னர் நாளை காலை வரை அவையை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
அதேபோல் இன்று காலை கூடிய மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அமளி காரணமாக அவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களவையில், பிரதமர் உரையின் போது வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு,பத்திரிகையாளர்களை உளவு பார்த்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை என்ற இரண்டு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தவிட்டனர்.