காங்கிரசில் உட்கட்சி மோதல்… பஞ்சாப்பில் பதற்றம்

பஞ்சாப்பில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. தற்போது, முன்னாள் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் மோதல் வெடித்துள்ளது.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மோதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் மோதமை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவில் கட்சித் தலைமை இருவரையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளது.
மேலும், சட்டப்பேரவை தேர்தலில் அமரீந்தர் சிங்கையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நவ்ஜோத்சிங் சித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் வைத்துச் சந்தித்தார். அப்போது, ராகுல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதனால், அதிருப்தி அடைந்துள்ள அமரீந்திர சிங், காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பஞ்சாப் மாநில விவகாரங்களில் காங்கிரஸ் தலைமை தலையிட்டு பிளவுபடுத்த வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.