மகனுடன் டெல்லி செல்லும் எடியூரப்பா… அரசியல் உள்நோக்கமா?
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளது. அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசிற்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். எடியூரப்பாவுடன் அவரது மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு 78 வயதாகிவிட்டதால் முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், மகனுடனான எடியூரப்பாவின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக்கூறுகையில், “இந்த டெல்லி பயணம் முதல்வரை மாற்றும் விவகாரம் இல்லை. எடியூரப்பா மீதமுள்ள ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடர்வார். மேகேதாட்டு திட்டத்தை அமல்படுத்த பிரதமர், அமைச்சர்களை சந்திக்கவே சென்றுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.