தான் தேநீர் விற்ற ரயில் நிலையத்தையே திறந்து வைக்கும் மோடி!

குஜராத்தின் மெஹசானா மாவட்டத்தின் வாட்நகரில் இது அமைந்துள்ளது. இந்த வாட்நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இன்றைய இந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் தந்தை தாமோதர்தாஸ் மோடி ஒரு தேநீர் கடை நடத்தி வந்தார். அதில் தனது சிறுவயதில் பிரதமர் மோடி தன் தந்தை விற்கும் தேநீருக்காக உதவி வந்துள்ளார்.
இந்திய பிரதமராக மோடி பதவியேற்றப் பின்னர் இந்த ரயில் நிலையம் பிரபலமடைந்தது. இதனையடுத்து, வாட்நகர் ரயில்நிலையம் பாரம்பரிய வளையத்தின் பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் அந்த ரயில்நிலையத்திற்கு ரூ.8.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று(16.7.2018) காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
மேலும், இவைத் தவிர காந்திநகர் ரயில்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர விடுதியையும், காந்திநகரிலிருந்து வரேதா வரை செல்லும் புறநகர் பயணிகள் ரயிலையும் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
தான் தேநீர் விற்ற அதே ரயில் நிலையத்தை தற்போது பிரதமர் என்ற முறையில் திறந்து வைப்பதால் அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.