பெண்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் ஆளுநர்
கேரளாவில் சமீப காலமாக வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் நிலவி வரும் வரதட்சணை கொடுமைக்கு எதிராகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக காந்திய அமைப்பு சார்பில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
காந்திய அமைப்பு சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், காந்திய அமைப்பின் போராட்டத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் காந்திய அமைப்பினருடன் சேர்ந்து ஆளுநர் மாளிகையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இன்று(14.7.2021) காலை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.