கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்குள் கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஸ் எனப்படும் பகலில் கடிக்கும் ஒரு வகை கொசுக்களால் தான் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தக் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சலும் பரவுவதால் மக்கள் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி அறிகுறிகள் ஏற்படும்.
ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு நம் உடலில் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன் மூலம் வயிற்றில் உள்ள குழந்தையும் பாதிக்கப்பட்டு குறைபிரசவம், கருச்சிதைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால், காய்ச்சல் தலைவலி, தோலில் நமைச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.