பெட்ரோல் விலை கூடினால் என்ன சைக்கிள் இருக்கிறதே… பாஜகவினரின் பொறுப்பற்ற பதில்கள்

உலகம் முழுவது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
பல மாநிலங்களில் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசிடம் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் விலை குறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ள பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஓம் பிரகாஷ் சக்லேச்சாவிடம், பெட்ரோல் விலை குறித்து கேட்கையில், “வாழ்க்கையில் கஷ்டங்கள் தான் நமக்கு மகிழ்ச்சியின் மதிப்பை உணர்த்துகிறது. எனவே, பிரச்சனைகள் ஏற்படாவிட்டால் நம்மால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜ.க எம்.பி.யான சித்தேஷ்வர், “ நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தால் சைக்கிளைப் பயன்படுத்துங்கள். சைக்கிள் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு ஆபத்தானது” எனவும் கூறியுள்ளார்.