வெள்ளத்தில் மிதக்கும் இமாச்சலப் பிரதேசம்!

கடந்த சில நாட்களாகவே இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் தர்மசாலாவில் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு(cloud burst)காரணமாக இமாச்சலில் உள்ள பாக்சு பகுதி வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கினால் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், பல கட்டிடங்கள், ஹோட்டல்கள் சேதமடைந்தன.
வெள்ளத்தில் மக்கள் சிலரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இனி வருகிற நாட்களிலும் இமாச்சலில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.