மின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட் 18 பேர் உயிரிழந்த சோகம்

வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
தலைநகர் ஜெய்பூரை அடுத்துள்ள ஆம்பூர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூடி இருந்த போது மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், கோடா, ஜலாபர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் பாய்ந்து 7 பேர் பலி என மொத்தம் 18 பேர் இறந்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இரங்கள் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.