இப்படியும் நண்பர்கள் இருப்பார்களா?

பொதுவாக நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே அந்த இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அதிலும் சில உயிர் நண்பர்கள் தங்களுக்குள் வித்தியாசமான பழக்கவழக்கங்களை கடைபிடிப்பர்.
அதுபோன்ற கேரளாவில் உள்ள உயிர் நண்பர்கள் இருவர் வினோதமான பழக்கம் ஒன்றை 25 வருடங்களாக கடைபிடித்து வருகின்றனர்.
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் உதயகுமார் என்ற நண்பர்கள் தங்களது நட்பை வெளிப்படுத்தும் விதமாக 25 ஆண்டுகளாக ஒரே மாதிரியான ஆடையை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ரவீந்திரன் மற்றும் உதயகுமார் இருவரும் தையல் கலை நிபுணர்கள் ஆவர். இருவரும் அடுத்த நாள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை முன்னரே தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்வார்கள்.
இவர்களது இந்த நட்பினை அங்கு வசிக்கும் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.