மேகதாது அணை கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது… எடியூரப்பா அறிவிப்பு!

சமீபத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை மத்திய அரசின் அனுமதியுடன் கட்டப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பிலிருந்தும் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு வருகின்ற போதிலும் கர்நாடக அரசு அதுகுறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.
இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மக்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அத்திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். மேலும், சட்ட நடைமுறைளுக்கு உட்பட்டு மேகதாது அணை கட்டப்படும் என்றும் இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சரை நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.