உள் நாட்டு விமான போக்குவரத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில், விமான போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், தொற்று பாதிப்பு குறைந்ததால் 50 சதவீத பயணிகளுடன் விமான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், 111 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இதனால், விமான போக்குவரத்தில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவிக்க வேண்டும் என விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் 65 சதவீத பயணிகளுடன் உள் நாட்டு விமானங்கள் இயக்கலாம் என அனுமதியளித்துள்ளது.
மேலும், ஜூலை 31 வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த விதிமுறைகள் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.