கொரோனாவைத் தடுப்பதில் வெகு தொலைவில் உள்ளோம்… மோடி கூறிய உண்மை

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதன் பாதிப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (30.6.2021) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், முக்கியமாகக் கொரோனா பாதிப்புகளைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர், “ இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கியுள்ளது.
ஆனால், கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை. தடுப்பூசி போடும் பணிகளும் இன்னும் நிறைவானதாக இல்லை. கொரோனா மூன்றாவது அலை பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். நாம் கொரோனா பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதில் வெகு தொலைவில் உள்ளோம். எனவே, போர்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியைச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.