ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருமா?

இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில், மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர கால பயன்பாட்டுக்காக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு மத்திய அரசின் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் வி.கே.பால் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் பைசர் தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உள்ள தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாகப் போடப்படுகிறது. ஆனால், ஜான்சன் & ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளில் மற்ற தடுப்பூசிகளைப் போல் அல்லாமல் ஒரு டோஸ் மற்றும் செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.