இந்த விலையில 5ஜி போனா, சான்ஸே இல்ல!
உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
தற்போது இந்தியா 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக பல்வேறு வெளிநாட்டு தொலைபேசி நிறுவனங்களும் இந்தியாவில் 5ஜி தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது ரியல் மீ நிறுவனம் புதிய அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெறும் 7000 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரியல் மீ நிறுவனம் தெரிவித்துள்ளது.