கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லையாம்… உஷார் மக்களே

இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையினால் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதன் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
தொற்று பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று பரவலின் தாக்கம் குறைந்துள்ளது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தொற்று பாதிப்பின் வேகம் குறைந்து வருவதால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக முடிந்து விடும் என நம்பப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலை ஜூலை மாதத்திற்குள் முடிந்து விடும் என சொல்லப்பட்ட நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் டாக்டர் பல்ராம் கொரோனா இரண்டாவது அலை குறித்து பேட்டியளித்துள்ளார்.
அவர், “இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை. நாட்டின் 80 மாவட்டங்களில் இன்னும் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. அதில், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் அடங்கும். இதனால், பாகாப்பு நடைமுறைகளில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது” என எச்சரித்துள்ளார்.