ட்விட்டர் நிர்வாக இயக்குநர் மீது வழக்குப்பதிவு
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/03/Twitter_reuters_file_pic.png)
இந்தியாவில், அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் வரைபடம் குறித்து தவறான சித்தரிப்பை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் வெளியிட்டுள்ள இந்தியாவின் வரைபடத்தில் இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தனித்து இருப்பது போற்றமளிக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர்பேன் போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக ட்விட்டர் இப்படியான வரைபடத்தை பகிர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விளக்கமளிக்குமாறு ட்விட்டரின் நிர்வாக இயக்குநர் மனிஷ் மஹேஷ்வரி மீது ஐபிசி 502(2) மற்றும் 74 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
பஜ்ரங்தள நிர்வாகி அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.