அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ரத்து… ஆந்திராவில் அதிரடி

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், 2019 ஆம் ஆண்டுக்கான நியமனம் மற்றும் அரசு பணிகள் குறித்து உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அனைத்து அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வின் போது, பலர் சட்டவிரோதமாக லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி விடுவதாக புகார் எழுந்ததால் ஆள் சேர்ப்பில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி இந்த ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மாநிலத்தில் குரூப் -1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளின் ஆட்சேர்ப்பு தேர்வுகளில் இனிமேல் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது. அதற்குப் பதிலாக எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்றும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர அரசின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.