ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கம் அளியுங்கள்… பிரதமர் மோடி வேண்டுகோள்!
கொரோனா அச்சத்தின் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது, மிகுந்த பாதுகாப்போடு ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
கொரோனா பரவலின் காரணத்தால் ரசிகர்களுக்கு குறைந்த அளவிலே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கம் அளியுங்கள் எனப் பேசியுள்ளார்.
மேலும், திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் நேர்மை ஆகிய அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது ஒரு சாம்பியன் உருவாகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.