உலகின் தலைசிறந்த கல்லூரிகள்… தமிழகத்தில் இருந்து 2 கல்லூரிகள்
ஒவ்வொரு ஆண்டும் சிஇஓ வேர்ல்ட் பத்திரிகை உலகின் சிறந்த நாடுகள், உலகின் சிறந்த மருத்துவம் மற்றும் ஃபேஷன் உள்ளிட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
உலகளவில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை சிஇஓ வேர்ல்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 6 இந்தியக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.
அப்பட்டியலில் 49ஆவது இடத்தில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியும் 64ஆவது இடத்தில் சென்னை மருத்துவ கல்லூரியும் உள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, வாரணாசி மருத்துவ கல்லூரி, புனே ராணுவ மருத்துவ கல்லூரி ஆகிய மற்ற இந்தியக் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.
இதில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை 23 ஆம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.