இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்பு தீவிரமாக இருந்தது.
தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,01,34,445
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 51,667
இதுவரை குணமடைந்தோர்: 2,91,28,267
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 64,527
கொரோனா உயிரிழப்புகள்: 3,91,981
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,329
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 6,12,868 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.