விடாப்பிடியாக இருக்கும் ஆந்திர அரசு…கண்டனம் தெரிவிக்கும் சுப்ரீம் கோர்ட்

இந்தியாவில், கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில், மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் தான் நடந்து வருகிறது.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
இதனையடுத்து, மாநில வழியில் கல்விகற்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொற்று பாதிப்பு அச்சம் இன்னும் நீங்காததால் தமிழகம், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், ஆந்திர மாநிலம் தொற்று குறைந்த பின்னர் ஜூலை மாதத்தில் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது.
இது குறித்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதி மன்றம் ஆந்திர அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா காரணமாக ஒரு மாணவனின் உயிர் போனாலும் அதற்கு ஆந்திர அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரித்தது. இதனையடுத்து, பொதுத்தேர்வை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.