நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு
இந்தியாவில், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வுகளும், பல மாநில அரசுகளின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பொதுத்தேர்வுகள் மட்டும் தான் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் மற்றும் ஜேஈஈ போன்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிபிஎஸ்இ மற்றும் மாநிலங்களுக்கான பொதுத்தேர்வுகள் குறித்த அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால், சிபிஎஸ்சி தேர்வு அடுத்து லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ போன்ற நுழைவுத் தேர்வுகள் ஏன் ரத்து செய்யப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு உச்சநீதி மன்றம் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுக்கும், நீட் போன்ற தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது. நீட் தேர்வை நடத்துவதா வேண்டாமா என்று தேசிய தேர்வு முகமை முடிவு எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.