ஒலிம்பிக் வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

32 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா காலம் என்பதால் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளைக் காண உலகம் முழுவதிலும் இருந்து 10000 நபர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஹாக்கி அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். ம

ற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது. இன்னும் சில வாரங்களில், டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்குகிறது. நமது குழுவினருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…