அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் மக்கள் தொகை 1,091,014 யாக இருக்கிறது. சுமார் 21,087 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மாநிலம் உள்ளது.

ஒரு சதுர கிமீ பரப்புக்கு 52 நபர்கள் வசித்து வருகின்றனர். மிசோரம் மாநிலம் இந்த சராசரியில் அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

இதனையடுத்து, அந்த மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அமைச்சர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிசோரம் மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர், “ஜஸ்வால் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்று, தற்போது உயிருடன் உள்ள ஆண் அல்லது பெண் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அந்த நபருக்கு சான்றிதழும், கோப்பையும் வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், மிசோரத்தை விடக் குறைந்த மக்கள் தொகை கொண்ட அண்டை மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் முதலமைச்சர் இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல வகைகளில் ஊக்கமளித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…