நான் ஒரு தமிழ் அபிமானி… பிரதமர் மோடி பேச்சு!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர், தமிழ் மீதும்,தமிழ் கலாச்சாரத்தின் மீதும் கொண்ட அன்பைப் பற்றி பேசியுள்ளார்.
அதில், உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் எனவும், மேலும் தான் ஒரு தமிழ் அபிமானி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழ் மீது நான் கொண்டிருக்கும் அன்பு என்றும் குறையாது எனவும், தமிழ் மொழி மீது மேலும் அன்பு பொங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.