டெல்டா ப்ளஸ் வைரஸால் எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு அதிகமாகும்?

இந்தியாவில், கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது டெல்டா வகை வைரஸ் தான். இந்த வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்துள்ளது.

இவ்வாறு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றிற்கு டெல்டா ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்டா ப்ளஸ் வகை கொரோனா வைரஸால் கொரோனா 3 ஆவது அலை பரவுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் சில மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

அதில், ’ மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் கொரோனா டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளது.

அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் தன்மையை இந்த கொரோனா வைரஸ் வகை கொண்டுள்ளது. ஆகையால் பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் இந்த மாநிலங்கள் கூடுதல் செலுத்த வேண்டும்.

டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் போதுமான அளவு மாதிரிகளை அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு முறையாக அனுப்பவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *