டெல்லியில் 100 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தினசரி கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

இதனையடுத்து, டெல்லியில் கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு தொற்று பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

இதனால், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 111 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கர்நாடகாவில் 1436 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெங்களூரில் மட்டும் 1008 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *