பிரதமருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்…மோடியை கிண்டலடிக்கும் ப. சிதம்பரம்

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி போடுவது ஒன்று தான் நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், 18 வயதை மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜூன் 21 ஆம் தேதியன்று ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம். உலக அளவில் ஒரே நாளில் அதிகமாக தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.
இதனை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “
ஞாயிற்றுக்கிழமையன்று பதுக்கி வையுங்கள்; திங்கள்கிழமையன்று தடுப்பூசி போடுங்கள்; செவ்வாய்க்கிழமை பழைய நிலைமைக்கே செல்லுங்கள். இதுதான் ஒருநாள் கரோனா தடுப்பூசி சாதனையில் ரகசியம்.
இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப்பட வேண்டும். ஏன் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசும் கொடுக்கலாம்.
மோடி ஹை.. மும்ஹின் ஹை என்பதை மோடி ஹை மிராக்கிள் என மாற்றிப் படிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.