காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படுமா?

ஐம்மு – காஷ்மீரில் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐம்மு – காஷ்மீரின் அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இதில், மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது, ஐம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி விட்டுத் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “

காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், பின்னர் தேர்தல்களை நடத்த விரும்புகிறார்கள்.

ஆனால், மத்திய அரசின் பதில் முதலில் தேர்தல் மற்றும் பின்னர் மாநிலம் என்று கூறுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும். குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *