ஒருவழியாக தாடியை ட்ரிம் செய்யும் மோடி

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை ஏற்பட்டதில் இருந்தே தனது தாடியை சேவ் செய்யாமல் நீளமாக வளர்த்து வருகிறார்.
ஆனால், அந்த தாடியிலும் அரசியல் காரணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மோடியின் தாடி நோபல் பரிசு பெற்ற ரவீந்திர நாத் தாகூரின் தாடியை நினைவுபடுத்துவதாக இருந்தது.
இதற்கு, நடந்து முடிந்த மேற்கு வங்கத் தேர்தலில் மக்களைக் கவர்வதற்காகவே வைத்தார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்துப் பலரும், எதையாவது வளர்க்க வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதாரத்தை வளருங்கள் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது, கொரோனா தாக்கம் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், தாடியை ட்ரிம் செய்ய முடிவு செய்துள்ளாராம் மோடி.