தாமதமாகும் முகேஷ் அம்பானியின் கனவு
இந்தியாவில், அனைவருக்கும் ஸ்மார்ட்போன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க இருப்பதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது உலகம் முழுவதும் உள்ள கொரோனா பொது முடக்கத்தால் ஸ்மார்ட் போன் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, போன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சிப் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு தாமதமாகும் எனத் தெரிகிறது.
இதனால், முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டமான அனைவருக்கும் மலிவு விலையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மொபைல்களின் உற்பத்தியைத் தொடங்கினாலும் குறைந்த அளவிலேயே தான் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.